" ஒருவேளை, இந்த உலகம் சரிதானோ நாங்கள் மனிதர்களை விட குறைவுதானோ?"
சில நூறு ஆண்டுகளாக மிருகங்களைப்போல் பிடித்துவரப்பட்டு விற்கப்பட்ட பெரும்பழங்குடியின் மக்கள்; இன்று, தன் இனத்தை சிறைபிடித்து வைத்திருக்கும் நிலத்தில் விடுதலையானவர்களாக, கால்கள் நகர மறுத்து, திக்குதெரியாமல் நின்றுகொண்டிருக்கும் ஆன்மாக்கள் எழுப்பும் வினா. "நாங்கள் மனிதர்களை விட குறைவுதானோ?"
தலைமுறைகளின் வலி, வேதனை, அவமானம், ஏமாற்றம்,உழன்றல் கடலிற்கடியில் அமிழ்ந்திருக்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருக்கும் ஆவிகளின் கதறல், உக்கிரங்களின்றி உண்மைகளை உணர்த்தும் விதமாக இந்நூலில் ஓங்கி ஒலிக்கும்.